BREAKING: ஆபத்து நீங்கியது… செமயான ஹேப்பி நியூஸ்!
BREAKING: ஆபத்து நீங்கியது…
செமயான ஹேப்பி நியூஸ்!
தென்மேற்கு வங்கக்கடலில்
நிலைகொண்டிருந்த புரெவி புயல் இன்று
நள்ளிரவு பாம்பன் – கன்னியாகுமரி
இடையே கரையை கடக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சற்றுமுன்
பாம்பன் அருகே 13 கி.மீ வேகத்தில்
நகர்ந்து வந்த புயல் வலுவிழந்து
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக
மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இதையடுத்து பாம்பன்
பகுதிக்கு வந்த ஆபத்து நீங்கியுள்ளதால்
பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திறமை இருந்தது; பணத்தைப்
பற்றி கவலைப்படவில்லை
இந்திய அணியில் நடராஜன் இடம்
பெற்றிருப்பது குறித்து சேவாக், “2017ல்
நடராஜனை பஞ்சாப் அணிக்காக 3
கோடிக்கு ஏலம் எடுத்தபோது உள்ளூர்ப்
போட்டிகளில் விளையாடாத ஒருவரை
எப்படி இவ்வளவு தொகை கொடுத்து
ஏலம் எடுத்தீர்கள் என்று என்னிடம்
கேட்டார்கள்.
அவரிடம் திறமை இருந்தது. அன்று பணத்தைப் பற்றி நான்
கவலைப்படவில்லை. இன்று அந்ததிறமை
உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது.
எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
JUST IN:புயலால் தொடர்
மழை… தமிழகத்திற்கு பெரும்
எச்சரிக்கை!
புயல் காரணமாக பெய்த தொடர்
மழையால் சென்னை மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள நீர் தேக்கங்களில் ஏறத்தாழ 90% நிறைந்துவிட்டன.
இந்நிலையில் வரும் 5ஆம் தேதி வரை
மழையின் தீவிரம் இருந்தால் பெரும்
பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய
நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் நீர்நிலைகளை கண்காணிக்கவும்,
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
முன்னறிவிப்பு கொடுக்கவும் தமிழக
அரசை அறிவுறுத்தியுள்ளது.
.