உயர்த்திய குரமங்கலம் காவல்

Top10PoliceStation – முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்

இந்தியாவில் மிக சிறப்பாக செயல்படும் #Top10 policeStation பட்டியலில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல்நிலையம்
2-வது இடம் பிடித்திருப்பது மிகுந்த
மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது
என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய
அளவில் தமிழகத்தின் பெருமையை
உயர்த்திய சூரமங்கலம் காவல்
நிலையத்திற்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தடை நீங்கியது… ‘கன்னிராசி’
நாளை வெளியீடு!

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்
உருவாகி இருக்கும் கன்னிராசி
படத்திற்கான தடை நீங்கியதால், நாளை
முதல் ரிலீசாக இருப்பதாக படக்குழு
அறிவித்துள்ளது.

இப்படத்தின் கர்நாடக
உரிமையா வாங்கியுள்ள ‘மீடியா
டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், இப்படத்தின்
தயாரிப்பு நிறுவனமான கிங் மூவி
மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் விநியோக
உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை
வழங்கப்பட்டது. தற்போது சுமூக முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.

BREAKING: ஆபத்து நீங்கியது…
செமயான ஹேப்பி நியூஸ்!

தென்மேற்கு வங்கக்கடலில்
நிலைகொண்டிருந்த புரெவி புயல் இன்று
நள்ளிரவு பாம்பன் – கன்னியாகுமரி
இடையே கரையை கடக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சற்றுமுன்
பாம்பன் அருகே 13 கி.மீ வேகத்தில்
நகர்ந்து வந்த புயல் வலுவிழந்து
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக
மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இதையடுத்து பாம்பன்
பகுதிக்கு வந்த ஆபத்து நீங்கியுள்ளதால்
பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami