HappyBirthday MithaliRaj…
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்
முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் பிறந்தநாள் இன்று. ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படியோ, அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி.

உலக அளவில்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக
போட்டிகளில் பங்கேற்றவர். அதிக ரன்கள்,
அதிக அரைசதம் அடித்தவர். அதிக
போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என
பல சாதனைகள் படைத்துள்ளார். மேலும்
சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.
justIn: நிவர், புரெவியை
அடுத்து புதிய புயல் – மீண்டும்
அலர்ட்…
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய
பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய
வானிலை மையம் அறிவித்துள்ளது.
நிவர் புயல் ஏற்கனவே கரையை கடந்த
நிலையில், புரெவி தற்போது பாம்பனை
நெருங்கி வருகிறது.
இந்நிலையில்,
மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு
பகுதி உருவாகிறது. இது எந்த திசை
நோக்கி செல்லும் என்பது குறித்த தகவல்
தெரிவிக்கப்படவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. எழுத்துத்தேர்வு
நிச்சயம்!
10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ
மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்
எழுத்துப்பூர்வமாக மட்டுமே நடைபெறும்
என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
ஆன்லைன் வாயிலாக நடைபெறும்
என்று தகவல் வெளியான நிலையில்,
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட
மாட்டாது என்றும் பொதுத்தேர்வு தேதிகள்
தொடர்பாக இதுவரை இறுதி முடிவு
எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.