லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும்….!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா
வந்தாலும்….!
ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்டா வந்தாலும் தேர்தலில் தான்
தெரியும் என திமுக எம்.பி கனிமொழி
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கினால் அது
திமுகவையோ, திமுக வாக்கு
வங்கியையோ பாதிக்காது என்றும்,
ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என
கமல்ஹாசன் கூறியது அவரது விருப்பம்
என்றும் கூறியுள்ளார்.
Posted
ராமருக்கு அணில்போல
ரஜினிக்கு நான்…!
‘வெறுப்பு அரசியல் வேரோடிக்
கிடக்கும் இன்றைய தமிழகத்தில்,
அன்பு சார்ந்து சாதி, மத பேதமற்று
அனைவரையும் அன்பினால்
ஆரத்தழுவுகிற ஆன்மீக அரசியலை
ரஜினி அரங்கேற்றுகிறார்” என தமிழருவி
மணியன் கூறியுள்ளார்.
மேலும், “இது
தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த
இந்தியாவுக்குமே ஒரு புதிய திசையை
காட்டும். மாற்றம் நோக்கி ரஜினி
புறப்பட்டுவிட்டார். ராமருக்கு அணில்
உதவியதுபோல், ரஜினிக்கு என்னால்
ஆன அனைத்தையும் செய்வேன்” என்று
கூறியுள்ளார்.
JustIn: ‘கடும் குளிரில் வீதியில்
கிடந்து’ – உருகிய நடிகர் கார்த்தி
மத்திய அரசின் வேளாண்
மசோதாக்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்து டெல்லியில் போராடி
வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக
நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.
“டெல்லி குளிரையும் பொருட்படுத்தாமல்
வீதியில் கிடந்து போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள்கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.அரசு தாமதிக்காமல் இதை வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என டுவீட் செய்துள்ளார்.
.