மோடிக்கு முதல்வர் கடிதம்
மோடிக்கு முதல்வர் கடிதம்
கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான
நிதியை உடனடியாக விடுவிக்க
வேண்டும் என்று பிரதமர் நரேந்திர
மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எழுதியுள்ளார்.

உயர்கல்விக்காக
தமிழக அரசு செலவிடும் ரூ.2,110
கோடி ரூபாயில், மத்திய அரசு ரூ.
584 கோடி மட்டுமே அளித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளார். கல்வி உதவித் தொகை
60% பங்களிப்பை மத்திய அரசு வழங்க
கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகமே கருப்புக் கடல்
ஆகட்டும்!
வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக
டெல்லியில் விவசாயிகள் தொடர்
போராட்டம் நடத்தி வரும் நிலையில்
திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகமே
கருப்புக் கடல் ஆகட்டும்; டெல்லி போல
குலுங்கட்டும்.
வேளாண் சட்டங்களுக்கு
எதிராக விவசாயிகளின் உரிமை காக்கும்
ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்” என்று
தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை மிரட்டிய
நடராஜன்!
தமிழக வீரர் நடராஜனின் அசத்தலான
பந்துவீச்சின் உறுதுணையுடன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல்
டி20 போட்டியில் இந்திய அணி
11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றுள்ளது. பரபரப்பான ஆட்டத்தில்
மேக்ஸ்வெல், கிரீஸை வீழ்த்தி நடராஜன்
திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இப்போட்டியில் 4 ஓவர்களில் மூன்று
விக்கெட்டுகளை எடுத்த அவர் 30
ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். முதல்
போட்டியே அவருக்கு மேட்ச் வின்னிங்
இன்னிங்சாக அமைந்துள்ளது.
Fostedia|
‘
.