மாஸ்டர்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி!
‘மாஸ்டர்’ சிறப்பு காட்சிக்கு
அனுமதி!
மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு
காட்சிக்கு அனுமதி கேட்டால் அளிக்க
தயாராக இருப்பதாக அமைச்சர் கடம்பூர்
ராஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா
நெருக்கடிகளுக்கு இடையே அதிகாலை
காட்சிக்கு அனுமதி கிடைத்ததால் விஜய்
ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜன.
13ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தை
வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.
JUSTIN: ரஜினியை சீண்டிய
முதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்!
ரஜினி கட்சி தொடங்குவது குறித்து
நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு
வெளியிட்டதை அடுத்து நாடு முழுவதும்
ரஜினி அலை வீசிக்கொண்டிருக்கிறது.
ரஜினிக்கு அரசியல் தலைவர்களும்
திரையுலக பிரபலங்களும் வாழ்த்து
சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில்,
முதல்வர் பழனிசாமி, ரஜினி முதலில்
கட்சியை பதிவு செய்கிறாரா என
பார்ப்போம். அதற்குப் பிறகு நான்
அவர் அரசியல் வருகை குறித்து
கருத்து சொல்கிறேன்” என அதிரடியாக
கூறியுள்ளார்.
ரஜினிக்கு கட்சி அலுவலகம்
தயார்!
அரசியல் கட்சி தொடங்குவதை
ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்து
விட்டநிலையில், சென்னை
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா
மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும்
பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில், தமிழருவி மணியனுக்கும்,
அர்ஜுனமூர்த்திக்கும் தனித்தனி
அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி
துவக்குவதற்கான அடுத்தக்கட்ட பணிகள்
மும்மரமாக நடைபெற்று வருவதால் ரஜினி
ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
.