மீண்டும் தட்டி தூக்கிய பாஜக TRS – BJP இடையே 4 இடங்கள்தான் வித்தியாசம்!!
மீண்டும் தட்டி தூக்கிய பாஜக TRS – BJP இடையே 4 இடங்கள்தான் வித்தியாசம்!!
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது, காரணம் பாஜகவின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என அனைவரும் சட்டமன்ற பொது தேர்தலுக்கு இணையாக பிரச்சாரம் செய்ததே இந்திய அளவில் கவனம் பெற காரணம்.

இந்நிலையில் காலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது பாஜக 88 வார்டுகள் வரை முன்னிலை பெற்றது, TRS கட்சி 33 வார்டுகள் வரை முன்னிலை பெற்றன, அதன் பிறகு வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன அப்போது நிலைமை தலைகீழாக மாறியது, TRS கட்சி சுமார் 70 வார்டுகள் வரை முன்னிலை பெற்றது, ஒவைசியின் AIMIM -30 வார்டுகள் முன்னிலையிலும் பாஜக 22 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றது.
இதையடுத்து TRS கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், ஆனால் அது நெடுநேரம் நீடிக்கவில்லை இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் TRS கட்சிகள் இடையே வெறும் 4 வார்டுகள் அளவில்தான் வித்தியாசம் உள்ளது,127 வார்டுகளுக்கு வெளிவந்த முடிவில் TRS – 51 இடங்களும் BJP – 47 இடங்களும், காங்கிரஸ் -02 இடங்களும், AIMIM -27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 150 வார்டுகளில் மீதமுள்ள 23 வார்டுகளின் முன்னிலை நிலவரம் தற்போதுவரை வெளியாகவில்லை. (3.50 PM நிலவரப்படி )
முழுமையான முடிவுகள் வெளியாக மாலை 6 மணியாகும் என்பதால் பாஜக,TRS, AIMIM என அனைத்து கட்சிகளும் என்ன முடிவு வரப்போகிறது என மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.