ஹைட்ரபாத் தேர்தல் முடிந்த கையோடு ஸ்டாலினுக்கு பரிசு அனுப்பிய பாஜக…!

ஹைட்ரபாத் தேர்தல் முடிந்த கையோடு ஸ்டாலினுக்கு பரிசு அனுப்பிய பாஜக…!

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வழக்கத்திற்கு மாறாக சட்டமன்ற பொது தேர்தலுக்கு இணையாக இந்தியா முழுவதும் பிரபலமானது, தேசிய ஊடகங்கள் அனைத்தும் மாநில ஊடகங்களுக்கு இணையாக மாநகராட்சி தேர்தல் முடிவுகளை நிமிடத்திற்கு நிமிடம் வெளியிட்டவண்ணம் இருந்தன.

இவற்றிற்கு முக்கிய காரணம் பாஜக தேசிய தலைவர்களான அமிட்ஷா, நட்டா யோகி, ஸ்ம்ரிதி இராணி என அனைவரும் களத்தில் இறங்கியதுதான் இந்நிலையில் நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவில் TRS -59, BJP -49 AIMIM -43 CONGRESS -2 இடங்களை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது 4 இடங்களை பிடித்த பாஜக இந்த முறை 49 இடங்களை பிடித்துள்ளது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அங்கு அடுத்த மேயராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது, ஆனால் பாஜக தங்களது வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டது இந்நிலையில் தெலுங்கானா மாநில மாநகராட்சி தேர்தலை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது.

வாரிசு அரசியல் எங்கெல்லாம் இருந்ததோ அந்த மாநிலங்களில் மிக பெரிய வெற்றியை பாஜக பெற்றுள்ளது, உதாரணத்திற்கு உத்திர பிரதேசத்தில் முலாயம் வாரிசு அகிலேஷ் யாதவை வீழ்த்தி வெற்றி பெற்றது, பீகாரில், லல்லு வாரிசு தேஜஸ்வி சூர்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது, மத்தியில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ராகுல் காந்தி அரசியலுக்கு முடிவு கொடுத்தது.

கர்நாடகாவில் தேவகவுடா வாரிசு குமாரசாமியை வீழ்த்தியது என அதன் பட்டியல் நீளுகிறது, இந்நிலையில் பாஜகவின் பட்டியலில் திமுகவும் இடம் பெற்றுள்ளது, அதனை கடந்த மாதம் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமிட்ஷா வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் வீழும் என கூறிவிட்டு திமுகவை விமர்சனம் செய்ததில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கையில் ஸ்டாலின் வருத்தப்படும் அளவில் ஒரு பரிசு ஒன்றை பாஜக கொடுத்துள்ளது அதாவது தெலுங்கானா ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், டுபாக்கா இடைத்தேர்தல் ஆகியவற்றில் பாஜகவிற்கு கள பணியாற்றியவர்களில் 50 % பேர் தமிழகம் வர இருக்கிறார்கள், அது நாளையோ நாளை மறுநாளோ அல்ல, திமுக விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் இன்று நடத்த இருப்பதால் இன்றே தமிழகத்திற்கு அந்த குழுவினர் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வர இருக்கிறார்கள்.

இவர்கள் மாநிலம் முழுவதும் களப்பணியாற்ற இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் இணைந்து கிராமம் தோறும் தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடங்கள் தாருங்கள் என பாக்கெட் சைஸ் புத்தகத்தை விநியோகிக்க தொடங்கிவிட்டனர், அதாவது எவ்வாறு கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் மத ரீதியாக வாக்குகளை ஒன்றிணைக்க தொடங்கியதோ அதே போல் இந்து அமைப்புகளும் களத்தில் இறங்கி விட்டன. அந்த புத்தகத்தில் இடம் பெற்ற கருத்துக்களை படிக்க.

எனவே பாஜக அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 35 தொகுதிகளை தேர்ந்தெடுத்து இப்போதே தெலுங்கானாவில் இருந்து வரும் களப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட இருக்கிறார்கள், இவர்களில் பெரும்பாலான நபர்கள் RSS அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் வருவதில் 70% நபர்களுக்கு தமிழ் பேச தெரியும் என்பதால் அவர்கள் கிராமங்களில் பெரிய மாற்றத்தை உண்டாக்குவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

கருப்பு சட்டை போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்த ஸ்டாலினுக்கு காவி சட்டை அணிந்த பாஜக RSS அமைப்பினரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami