BREAKING: தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!
BREAKING: தமிழக முதல்வர்
பழனிசாமி அதிரடி உத்தரவு!
புரெவி புயல், கனமழையால் இறந்த 7
பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்
வழங்க முதல்வர் ஈபிஎஸ் அதிரடியாக
உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,
புயல் மற்றும் மழையால் இறந்த மாடு
ஒன்றுக்கு ரூ.30,000, எருதுக்கு ரூ.25,000,
கன்றுக்கு ரூ.16,000, ஆடுக்கு ரூ.3,000
நிவாரண உதவி வழங்கப்படும் என்றும்
அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை
அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள 33 கொரோனா
சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன்
வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும்
என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை அதிரடியாக உத்தரவு
பிறப்பித்துள்ளது.
கோயில்களில் சித்த
மருத்துவமனை அமைக்க கோரிய
வழக்கில், சித்த மருத்துவத்தில்
வருங்காலத்தில் ஊசி போட ஏற்பாடு
செய்யப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில்
மத்திய அரசு புதிய தகவலை
தெரிவித்துள்ளது.
முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி
புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற
மத்திய பாஜக அரசிடம் முதல்வர்
வலியுறுத்த வேண்டும் என்று திமுக
தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று
ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர்
பழனிசாமி வாய் திறக்கவில்லை
என்றும், முதல்வரால் விவசாயிகளுக்கும்
பயனில்லை, மக்களுக்கும் பயனில்லை
என்றும் விமர்சித்துள்ளார்.
.