விடுதலை விவகாரத்தில் சிறப்பு சலுகை கிடையாது!

விடுதலை விவகாரத்தில் சிறப்பு
சலுகை கிடையாது!

விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு
எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படாது
என்று கர்நாடக உள்துறை அமைச்சர்
பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்
சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு
பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 ஆம்
ஆண்டு சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 கோடி
அபராதம், சிறப்பு நீதிமன்றத்தில் அவரது
சார்பாக அண்மையில் செலுத்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுடன் கைகோர்த்த
வெற்றிமாறன்

“அசுரன்” படத்தை தொடர்ந்து இயக்குநர்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில்
உருவாகவுள்ள புதிய படத்திற்கு
இசைஞானி இளையராஜா இசையமைக்க
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வெற்றிமாறன் படங்களுக்கு
ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ்
நாராயணன் இசையமைத்த நிலையில்,
முதல் முறையாக இளையராஜாவுடன்
இணைந்துள்ளார்.

விஜயை இயக்கப்போவது யார்?

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும்
65வது படத்தை நெல்சன் இயக்க
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பா.ரஞ்சித் விஜயை வைத்து
ஒரு சூப்பர் ஹீரோ கதை உருவாக்க
உள்ளதாக தெரிவித்த நிலையில்,
பாண்டிராஜ். அருண்ராஜா காமராஜ், அஜய்
ஞானமுத்து ஆகியோர் பெயர்களும்
வலம் வருகிறது.

இந்நிலையில் விஜயை
சூப்பர் ஹீரோவாக பார்க்க எதிர்பார்ப்புகள்
அதிகரித்துள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami