அஜித்தின் வலிமை வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்!
அஜித்தின் வலிமை வெளியீடு:
ரசிகர்கள் உற்சாகம்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்
நடித்து வரும் ‘வலிமை’படம் ஏப்ரல்
மாதம் வெளியாகும் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளது.

படப்பிடிப்புகள்
85% நிறைவடைந்து, எடிட்டிங் பணிகள்
நடைபெற்று வருவதாக படக்குழு
தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால்
அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
JustIn: பாஜகவில் இணையும்
‘லேடி சூப்பர் ஸ்டார்’….அடி தூள்
தென்னிந்திய சினிமாவின் லேடி
சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி நாளை
பாஜகவில் இணைவார் என்று தகவல்
வெளியாகியுள்ளது.ஏற்கெனவே பாஜகவில் இருந்த அவர் டிஆர்எஸ்மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார்.
காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில்இருந்த
அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்
உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில்
இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷா
முன்னிலையில் கட்சியில் இணைவார்
என்று தெரிகிறது.
JUST IN: சாதாரணமாக
எண்ணிவிடக்கூடாது… அமைச்சர்
எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
குறைகிறது என சாதாரணமாக
எண்ணிவிடக்கூடாது என்று
அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
விடுத்துள்ளார். உலக நாடுகள்
கொரோனாவின் 2வது, 3வது அலைகளை
சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலை தமிழகத்திற்கு வராமல்
இருக்க, அனைவரும் முகக்கவசம்
அணிவதை கட்டாயமாக்கிக் கொண்டு
முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
.