முதல்வர் ஈபிஎஸ் வேண்டுகோள்
முதல்வர் ஈபிஎஸ் வேண்டுகோள்
கொடிநாள் நிதியினை தாராளமாக வழங்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். டிசம்பர் 7ம் நாளை படைவீரர் கொடி நாளாக
அனுசரிக்கிறோம்.

வீரர்கள் தியாகத்தை
போற்றுகிற அதே வேளையில் உதவி
செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.
முப்படை வீரர்களின் சேவையை போற்றும்
வகையில் தாராளமாக நிதி வழங்க
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து
அவர் சென்னையிலுள்ள
தனியார் மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருடைய உறவினர்களுக்கும்
அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும்
கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இன்று முதல் இலவச உணவு –
அரசு அறிவிப்பு
சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு
இன்று முதல் டிசம்பர் 13 வரை இலவச
உணவு வழங்க முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். 5.3 லட்சம் குடும்பம்
உள்ள நிலையில், சமுதாய நலக்கூடங்கள்,
அம்மா உணவகங்கள் மூலம் குடிசையில்
வசிக்கும் 23 லட்சம் பேருக்கும் உணவு
வழங்க திட்டமிட்டுள்ளது.
இப்பணி முழு
வீச்சில் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.