கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா!
கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து
அவர் சென்னையிலுள்ள
தனியார் மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடைய உறவினர்களுக்கும்
அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும்
கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இன்று முதல் இலவச உணவு –
அரசு அறிவிப்பு
சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு
இன்று முதல் டிசம்பர் 13 வரை இலவச
உணவு வழங்க முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். 5.3 லட்சம் குடும்பம்
உள்ள நிலையில், சமுதாய நலக்கூடங்கள்,
அம்மா உணவகங்கள் மூலம் குடிசையில்
வசிக்கும் 23 லட்சம் பேருக்கும் உணவு
வழங்க திட்டமிட்டுள்ளது.
இப்பணி முழு
வீச்சில் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பற்களில் மஞ்சள் கறை நீங்க…
பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய்
எண்ணெய் -1 ஸ்பூன், ஆப்பிள்
சீடர் வினிகர் – 1 ஸ்பூன், எலுமிச்சை
சாறு 1 ஸ்பூன், டூத் பேஸ்ட் – 1
ஸ்பூன் ஆகியவற்றை பேஸ்ட் போல்
கலந்துகொள்ளவும்.
அலுமியத்தாள்
ஒன்றை விரித்து அவற்றில் பரப்பியவாறு
வைக்கவும். அதை பற்களை சுற்றிலும்
ஒட்டிவிட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து
பிரஷ்ஷால் தேய்த்துவிட்டு வெந்நீரில்
கொப்பளித்தால் கறை குறைந்திருக்கும்.