சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பெண்களுக்கு…!
சென்னையில் தங்கி வேலை
பார்க்கும் பெண்களுக்கு…!
கேரளாவை சேர்ந்த மாணவி மோகனா
சாஜன் நடத்திய ஆய்வில், “பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும்
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்
சென்னை” என்று தெரியவந்துள்ளது.

மேலும், இரவு 7 மணி போல்தான் இரவு
10 மணியும் உள்ளது. எந்த நேரத்திலும்
பெண்கள் நடமாடலாம். சென்னையில்
தங்கி வேலை பார்க்கும் பெண்கள் இரவு
11 ஆனாலும் ரயில், ஆட்டோ உள்ளிட்ட
வாகனங்களிலோ அல்லது நடந்தோ
தைரியமாக வீடுகளுக்கு வரலாம் என்றும்
தெரியவந்துள்ளது.
இந்தியா பவுலிங் -ஜடேஜாவுக்கு
பதில் சாஹல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20
போட்டியில் இந்திய அணியின் கேப்டன்
கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
காயம் காரணமாக ஜடேஜா தொடரில்
இருந்து விலகியதால், அவருக்கு பதில்
சாஹல் அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் இந்த போட்டியிலும், பும்ரா
இடம்பெறவில்லை. தமிழக வீரர் நடராஜன்
இடம்பிடித்துள்ளார்.
இங்கி.,- தென்னாப்பிரிக்கா
ஒருநாள் போட்டி ரத்து!
கொரோனா சூழல் காரணமாக இங்கிலாந்து
- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல்
ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா
வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று
உறுதியானதால், கடந்த 4ஆம் தேதி
நடைபெறவிருந்த போட்டி இன்று
நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட
நிலையில், முழுவதுமாக ரத்து
செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.