சாலை வழியாக பெங்களூரு செல்லும் ரஜினி!
சாலை வழியாக பெங்களூரு
செல்லும் ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து
சாலை வழியாக பெங்களூரு புறப்பட்டு
செல்கிறார். பெங்களூரு செல்லும் ரஜினி,
முக்கிய நபர்களுடன் கட்சி தொடங்குவது
குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக
கூறப்படுகிறது.

இதன்பின் அவர்
அங்கிருந்து ஐதராபாத்தில் நடைபெறும்
அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்கிறார்.
முதல்வர் ஈபிஎஸ் வேண்டுகோள்
கொடிநாள் நிதியினை தாராளமாக வழங்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். டிசம்பர் 7ம் நாளை படைவீரர் கொடி நாளாக
அனுசரிக்கிறோம்.
வீரர்கள் தியாகத்தை
போற்றுகிற அதே வேளையில் உதவி
செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.
முப்படை வீரர்களின் சேவையை போற்றும்
வகையில் தாராளமாக நிதி வழங்க
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து
அவர் சென்னையிலுள்ள
தனியார் மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருடைய உறவினர்களுக்கும்
அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும்
கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட இருக்கிறது.