இதற்கு எதற்கு தேர்தல் நடத்தணும்? முடிவுவுகள் வெளியான நிலையில் மண்ணோடு மண்ணா போன ஹைதராபாத் மேயர் தேர்தல் !!!
இதற்கு எதற்கு தேர்தல் நடத்தணும்? முடிவுவுகள் வெளியான நிலையில் மண்ணோடு மண்ணா போன ஹைதராபாத் மேயர் தேர்தல் !!!
தமிழகத்தில் இரண்டு விதமான மேயர் தேர்தல்களை நாம் சந்தித்து இருக்கிறோம் ஒன்று மேயருக்கு மட்டும் ஒரு வாக்கு,வார்டு கவுன்சிலர்களுக்கு ஒரு வாக்கு என இரண்டு வாக்குகள் பதியப்படும், மேயர் தேர்தலில் வெற்றிபெற்றவர் நேரடியாக மேயராக பொறுப்பேற்பார், வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து துணை மேயரை தேர்ந்து எடுப்பார்கள். இதில் மேயர் ராஜினாமா செய்தால் மீண்டும் மேயர் பதவிக்கு தனி தேர்தல் நடத்தவேண்டும்.
மற்றொன்று வார்டு கவுன்சிலர் தேர்தல் மட்டும்நடைபெறும் இதில் வெற்றிபெறும் கவுன்சிலர்கள் சேர்ந்து மேயர், துணை மேயரை தேர்ந்து எடுப்பார்கள், மேயர், துணை மேயர் யார் ராஜினாமா செய்தாலும் மீண்டும் தேர்தல் நடத்த தேவையில்லை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்து எடுக்கலாம். இந்த இரண்டு முறை தேர்தல்தான் நாம் தமிழகத்தில் கடைபிடித்துள்ளோம் ஆனால் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மிகவும் வித்தியாசமான முறை கடைபிடிக்க படுகிறது.

ஹைதரபாத் கார்பரேசனின் மேயராக
ஒருவர் வர வேண்டும் என்றால் அவரை
ஹைதரபாத் கார்பரேசனில் உள்ள 150 வார்டுகளில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் மட்டும் வாக்களித்து தேர்ந்தெடுக்கமுடியாது,
ஹைதரபாத் மாநகராட்சிக்கு
உட்பட்ட எம்.எல்.ஏ.கள்,எம்.பி.கள் எம். எல். சி-கள் ஆகியோரும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் இவர்களை ex officio members என்று
கூறுகிறார்கள்.
இவர்களின் வாக்குகளை அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க பயன்படுத்தி வரும் எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் போல் உள்ளது . இப்படி ஹைதரபாத் கார்பரேசனில் 52 எம்.எல்.ஏ எம்.பி-கள் எம்.எல்.சி- கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
அதாவது ஹைதரபாத் கார்பரேசனுக்கு
உட்பட்ட 25 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. 5 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது .இந்த தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் எம்எல்ஏ எம்பிக்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும். அதோடு ஹைதரபாத் கார்பரேசன் தேர்தலில் ஓட்டு போடும் உரிமை உள்ள ராஜ்யசபா எம்பிக்கள் எம்.எல்.சிக்களுக்கு மேயர் தேர்தலில் ஒட்டுப்போடும் உரிமை இருக்கிறது..
சுருக்கமாக சொல்ல போனால் சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தால் வார்டு கவுன்சிலர் மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சி எல்லைகுள் இருக்கும் mla, mp ஆகியோருக்கும் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களை போன்று மேயரை தேர்தெடுக்க வாக்கு போடும் உரிமையை கொடுத்துள்ளது, இந்த தேர்தல் முறை மூலம் நிச்சயம் ஆளும் கட்சி மட்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் 90% இருக்கிறது.
இந்த தேர்தல் முறைதான் அமெரிக்காவில் இருக்கிறது அதனால் தான் தேர்தல் முடிந்து இரண்டு மாதம் தொட இருக்கும் நிலையிலும் அங்கு ஒரு முடிவு வரவே இல்லை அதே போல் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் TRS மற்றும் AIMIM இரண்டும் கூட்டணி அமைக்கவில்லை என்றால் இழுபறித்தான் நீடிக்கும் என்கின்றனர் அங்கிருக்கும் நமது வட்டாரங்கள்.