டிசம்பர் 14,15 தேதிகளில் பிரதமர் சென்னை வருகிறார் காரணம் என்ன?
டிசம்பர் 14,15 தேதிகளில் பிரதமர் சென்னை வருகிறார் காரணம் என்ன?
கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா தமிழகம் வருகை தந்தது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியது, மேலும் பாஜக அதிமுக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது, அத்துடன் அமிட்ஷா பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கி விடியற்காலை 3 மணி வரை நீடித்தது, அதன் பிறகு டெல்லி செல்லும் முன்பு, RSS பிரதிநிதிகள், குருமூர்த்தி,உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் உள்துறை அமைச்சரை சந்தித்தனர் பின்பு டெல்லி சென்ற அமிட்ஷா அன்றைய தினமே பிரதமரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து தெரிவித்தார் அதனையடுத்து பிரதமரும் தமிழகம் வர இருப்பதாக தகவல் கிடைத்தது. (இது குறித்து TNNEWS24 முன்பே செய்தி வெளியிட்டது )

இந்நிலையில் வருகின்ற 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் பிரதமர் ஒரு நாள் அரசுமுறை பணமாக தமிழகம் வர இருப்பதாகவும் சென்னை வரும் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது, இதுவரை பிரதமரின் அறிவிப்பு குறித்து தற்போதைய நேரம் வரை அதிகார பூர்வ அறிவிப்பு கொடுக்கப்படவில்லை எனினும் நமக்கு அவ்வாறான தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் சூழலில் அதிமுக பாஜக ரஜினி என கூட்டணி கணக்கு அமையுமா? எதிர்க்கட்சி கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் அமையுமா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும், பிரதமர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியில் தேவேந்திர குல வேளாளர் என ஒருங்கிணைந்த பெயர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழகம் வரும் பிரதமரை எதிர்க்கட்சியான திமுக சந்திக்க வாய்ப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதுகுறித்து இதுவரை பிரதமர் அலுவலகம் எந்தவித உறுதியான பதிலை அளிக்கவில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன, உள்துறை அமைச்சர் அமிட்ஷா வருகை தமிழக அரசியல் களத்தை மாற்றிய நிலையில் அக்கட்சியின் பிதாமகனாக பார்க்கப்படும் பிரதமரின் வருகை தமிழக அரசியல் களத்தில் என்ன மாற்றங்களை உண்டாக்க போகிறது என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
எங்களது செய்திகள் உடனடியாக உங்களை வந்து அடைய வேண்டுமா?