வெண்ணீரில் குளித்தால் ஆண்மை குறையும்….
வெண்ணீரில் குளித்தால் ஆண்மை குறையும்….
வெந்நீரில் குளித்தால் ஆண்மை
குறைபாடு ஏற்படுமா?
ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம்
குளிப்பதால் விந்தணுக்களின்
எண்ணிக்கை, செயல்திறன் குறைய
வாய்ப்புள்ளதாக கலிபோர்னியா
பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய
வந்துள்ளது.

ஷவரை விட, குறிப்பாக
குளியல் தொட்டிகளில் குளிப்பதால்
இப்பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.
ஆறுதலான விஷயம், வெந்நீரில்
குளிப்பதை நிறுத்திய சில மாதங்களின்
இப்பாதிப்பு சரியாகி விடுமாம்.
ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது
நல்லது, உடல் அசதியாக இருக்கையில்
வெந்நீர் குளியல் போடலாம் என்று
பரிந்துரைக்கின்றனர்.
சமையல் சிறு குறிப்புகள்….
*கிரேவி வகையறாக்கள் செய்யும்போது,
பிடி வேர்க்கடலையை எடுத்து தோல்
நீக்கி அரைமணிநேரம் நீரில் ஊறவைத்து
நைஸாக அரைத்து சேர்த்தால், கிரேவி
டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*ஜவ்வரிசி
(அ) அரிசிக்கூழை கிளரும்போது
கசகசாவையும் ஒன்றிரண்டாக பொடி
செய்து போட்டு கிளறி வடாம் (அ) வற்றல்
தயாரித்தால், பொரிக்கும்போது தனி
மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
*தினமும் சிறிது துளசி இலைகளை
மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள்
வராது.
நேரில் நலம் விசாரித்த முதல்வர்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள எலூரில்
250க்கும் மேற்பட்டவர்கள் திடீரென
மயங்கி விழுவதும், வாயில் நுரை
தள்ளுவதுமாக இருக்க பதறிய
மக்கள் பாதிக்கப்பட்டோரை மீட்டு
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,
பாதிக்கப்பட்டோரை முதல்வர் ஜெகன்
மோகன் ரெட்டி நேரில் சென்று நலம்
விசாரித்துள்ளார்.