சமையல் சிறு குறிப்புகள்….
சமையல் சிறு குறிப்புகள்….
*கிரேவி வகையறாக்கள் செய்யும்போது,
பிடி வேர்க்கடலையை எடுத்து தோல்
நீக்கி அரைமணிநேரம் நீரில் ஊறவைத்து
நைஸாக அரைத்து சேர்த்தால், கிரேவி
டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*ஜவ்வரிசி
(அ) அரிசிக்கூழை கிளரும்போது
கசகசாவையும் ஒன்றிரண்டாக பொடி
செய்து போட்டு கிளறி வடாம் (அ) வற்றல்
தயாரித்தால், பொரிக்கும்போது தனி
மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
*தினமும் சிறிது துளசி இலைகளை
மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள்
வராது.
நேரில் நலம் விசாரித்த முதல்வர்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள எலூரில்
250க்கும் மேற்பட்டவர்கள் திடீரென
மயங்கி விழுவதும், வாயில் நுரை
தள்ளுவதுமாக இருக்க பதறிய
மக்கள் பாதிக்கப்பட்டோரை மீட்டு
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,
பாதிக்கப்பட்டோரை முதல்வர் ஜெகன்
மோகன் ரெட்டி நேரில் சென்று நலம்
விசாரித்துள்ளார்.
397 ஆண்டுகளுக்கு பின் அரிய
நிகழ்வு
கோள்களின் இயக்கத்தில் மிக அரிய
நிகழ்வு டிச.21-ம் தேதி நடைபெறும் என்று
பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. டிச.
21-ல் வியாழன், சனி ஆகிய இரு பெரிய
கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் மிக
அருகில் சந்திக்க உள்ளன.
இதேபோன்ற
நிகழ்வு கடைசியா 1623-ம் ஆண்டில்
நடந்தது. கிரேட் கஞ்சங்ஷன் என்று
அழைக்கப்படும் இந்நிகழ்வின் போது
இருகோள்களும் ஒரே பெரிய நட்சத்திரம்
போல் பிரகாசமாக தெரியும்.