பரபரப்பு: பாலியல் தொல்லை – காவலருக்கு மண்டை உடைப்பு
பரபரப்பு: பாலியல் தொல்லை –
காவலருக்கு மண்டை உடைப்பு
சென்னை வடபழனியில் பேருந்துக்கு
காத்திருந்த பெண்ணுக்கு காவலர் ஒருவர்
பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள்
காவலருக்கு தர்ம அடி கொடுத்ததில்
அவரது மண்டை உடைந்தது. பணிமுடிந்து
வீடு திரும்பிக் கொண்டிருந்த காவலர்,
மதுபோதையில் சில்மிஷம் செய்துள்ளார்.
மேலும், காவலரை பணி நீக்கம் செய்து
கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 நாள்கள் கல்லூரிகள்
செயல்படும்- அரசாணை
வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள்
செயல்படும்; தொற்று அறிகுறி
இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி
இல்லை என்று தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரியின்
விடுதியில் ஒரு அறையில் ஒரு
மாணவர் மட்டுமே இருக்க வேண்டும்.
கல்லூரிகளுக்கு அருகே உள்ள
உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள்
தங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
அந்நிய மண்ணில் தொடர்
வெற்றி- இந்தியா 2வது இடம்!
அந்நிய நாட்டு மண்ணில் தொடர் வெற்றி
பெறும் பட்டியலில் இந்திய அணி 2வது
இடத்தை பிடித்துள்ளது.
வெளிநாட்டுமண்ணில் விளையாடிய சர்வதேசடி20 போட்டிகளில் இந்திய அணி
தொடர்ச்சியாக 10 வெற்றி பெற்று 2வது
இடத்திலும், 12 தொடர் வெற்றிகளைப்
பெற்று ஆப்கான் அணி முதலிடத்திலும்
உள்ளன.
.