ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 24 குறைவு!
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.
24 குறைவு!
சென்னையில் இன்று காலை நேர
நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24
குறைந்து ரூ.37,192க்கும், கிராமுக்கு ரூ.
3 குறைந்து ரூ.4,649க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.40,232க்கும்,
கிராமுக்கு ரூ.5,029க்கும், ஒரு கிராம்
வெள்ளி விலை ரூ.67.50க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
Breaking:முதல்வர் ஈபிஎஸ்
அதிரடி – யாரும் எதிர்பார்க்காத
அறிவிப்பு
சாதிவாரி புள்ளி விபரங்களை சேகரிக்க
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி
குலசேகரன் தலைமையில் ஆணையம்
அமைத்து முதல்வர் ஈபிஎஸ் அதிரடி
அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குலசேகரன் தலைமையிலான ஆணையம்
உடனே செயல்பாட்டுக்கு வருவதோடு
விரைவில் புள்ளி விபரங்களை திரட்டி
அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும்
சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து
நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து
மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் – கஸ்தூரி விமர்சனம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து
நடிகை சனம் ஷெட்டி நேற்று
வெளியேற்றப்பட்டார். இது குறித்து
நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில்,
“நியாயமான நேர்மையான முறையில்
மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி
விளையாடப்படும் ஒரு Game என்று
இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு
வரவும்.
மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும்
கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து
மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு
பேரு என்ன தெரியுமா?” என்று தனியார்
தொலைக்காட்சியை விமர்சனம்
செய்துள்ளார்.