நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி!
நாட்டுப்படகு மீனவர்கள்
மீன்பிடிக்க அனுமதி!
வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம்
உள்ளிட்ட 15 கிராம நாட்டுப்படகு
மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால்
கடந்த 17 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச்
செல்லாமல் இருந்த நிலையில், மீன்பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதேபோல், புயல் எச்சரிக்கை முடிந்த
நிலையில், 7 நாட்களுக்கு பிறகு நெல்லை
மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில்
மாற்றம்?- திடீர் பரபரப்பு!
இமயமலையில் உள்ள எவரெஸ்ட்
சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக
பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
8,848 மீட்டர் கொண்ட எவரெஸ்ட்
சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டது
குறித்து நேபாள அரசு நாளை அறிவிப்பு
வெளியிடுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு
ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரத்தில்
மாற்றமா? என்பது குறித்து ஆய்வு
நடத்தப்படுகிறது.
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – பாராட்டு, ரிஷபம் – கவலை,
மிதுனம் – செலவு, கடகம் – கவனம்,
சிம்மம் – நன்மை, கன்னி – பெருமை,
துலாம் – பக்தி, விருச்சிகம் – தெளிவு,
தனுசு – வெற்றி, மகரம் – வரவு,
கும்பம் – பொறுமை, மீனம் – மறதி.
.