விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரீத்தி ஜிந்தா ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்திற்கு
பிரீத்தி ஜிந்தா ஆதரவு
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக
போராடி வரும் விவசாயிகளின்
போராட்டத்திற்கு நடிகை பிரீத்தி ஜிந்தா
ட்விட்டர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதில், “நமது தேசத்தை இயங்க வைத்துக்
கொண்டிருக்கும் நமது மண்ணின்
போர் வீரர்கள் அவர்கள். அரசுக்கும்,
விவசாயிகளுக்கும் இடையேயான
பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை
எட்டி பிரச்சினை தீர்க்கப்படும் என
நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சரக்கும் சால்னாவுமாக துக்ளக்
தர்bar-ல் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர்
பக்கத்தில் “விரும்பும்) சேதுபதியுடன்
துக்ளக் தர்bar-ல் சரக்கும் சால்னாவுமாக
செட்டு களை கட்டுகிறது.
கல்லாவும்
கட்டும் விரைவில்!, தனியா இருக்க தீவுக்கு
துணையா போயிட்லாமான்னு பாக்குறேன்
என்றோ நான் எழுதிய வாசகத்தை அவர்
நினைவு கூற… கூர்மையான அவர்
நினைவாற்றலை நான் மெச்ச, மனுஷன்
தான் பட்ட கஷ்டங்களையும் இன்று வரிசை
கட்டி நிற்கும் ஹிந்தி படங்களையும்
அமைதியாய் சொல்ல, மகிழ்ச்சியாய்
கழிகிறது ” என்று தெரிவித்துள்ளார்.
OMG! பிப்.,8 முதல் உங்கள்
வாட்ஸ்அப் கணக்கு தானாக
டெலிட் ஆகிவிடும்
ஜனவரி 1-ந் தேதி முதல் வாட்ஸ்அப்
நிறுவனம் புதிய நிபந்தனைகளை
கொண்டுவர உள்ளது. இந்த
நிபந்தனைகள ஏற்றுக்கொள்ளாவிட்டால்,
உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தானாக
நீக்கப்படும் என்றும், இது பிப்ரவரி 8-ந்
தேதி முதல் அமலுக்கு வரும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
பயனர்களின் சாட்களை சேமிக்கவும்,
நிர்வகிக்கவும், ஃபேஸ்புக் வழங்கும்
சேவைகளை வணிகங்கள் எவ்வாறு
பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும்.
.
.
.