ரயில் மீது கல்லெறிந்த பாமகவினர் தற்போதைய நிலை என்ன ஆதார் கார்டு அடையாளமாக கொண்டு தூக்கப்பட்டனர்.
ரயில் மீது கல்லெறிந்த பாமகவினர் தற்போதைய நிலை என்ன ஆதார் கார்டு அடையாளமாக கொண்டு தூக்கப்பட்டனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாமக தொண்டர்கள் சென்னைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை பெருங்களத்தூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த சிலர் அருகிலிருந்த ரயில்வே தண்டவாளத்தின் இரும்பு பெட்டிகளை வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ரயில் ஒன்றின் இஞ்சின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் வீடியோ, போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வீடியோவின் அடிப்படையில் ரயில் மீது கல் வீசியதாக பாமகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது,மேலும் ரயில் மீது கல்லெறிந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மேற்கொள்ளப்பட்டது அப்போது போராட்டத்தின் ஊடே இருந்த உளவு பிரிவு போலீசார் அங்கு சேகரித்த தகவல் மற்றும் வீடியோ ஆதாரங்களை கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் ஆதார்கார்டு கொண்டு முக அடையாளங்கள் ஒப்பீடு செய்யபட்ட நிலையில் கல்லெறிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர், முதற்கட்டமாக ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலை சேர்ந்த முத்துசாமி, முனுசாமி, பழனிசாமி, சித்தோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், நந்தகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது அனுமதி இல்லாமல் கூடுதல், தண்டவாளத்தை கடப்பது, ரயில் மறியலில் ஈடுபடுதல், கற்களை வீசி தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் எந்த போராட்டம் வேண்டுமானாலும் நடைபெறலாம் எனவும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த முயன்றால் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கல்லெறிந்த பாமகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட வெகு சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.