விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மாணவர்கள்

விவசாயிகளுக்கு ஆதரவாக
களமிறங்கும் மாணவர்கள்

புதிதாக அமல்படுத்தப்பட்ட வேளாண்
சட்டங்களை ரத்து செய்யக்கோரி
டெல்லியில் விவசாயிகள் போராடி
வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு
துறையினர், தொழிற்சங்கத்தினர் ஆதரவு
அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,
தமிழகத்தில் தஞ்சை சரபோஜி அரசு
கல்லூரி வாயில் முன் இந்திய மாணவர்
சங்கத்தினர் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.

சித்ரா தற்கொலை – ஆர்டிஓ
விசாரணை

சென்னையில் பிரபல சின்னத்திரை
நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்டிஓ
விசாரணை தொடங்கியுள்ளது.

நிச்சயம்
நடந்த ஹேமந்த் ரவியுடன் 2 மாதத்துக்கு
முன்பே (அக்டோபர் 19ம் தேதி) சித்ரா
பதிவு திருமணம் செய்துகொண்டதாக
தகவல் வெளியாகியுள்ள நிலையில்
சித்ராவின் தற்கொலை குறித்து
அவரிடமும் விசாரணை நடைபெற்று
வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami