ரயிலை நம்பியிருக்கும் மாணவர்கள்
ரயிலை நம்பியிருக்கும்
மாணவர்கள்
கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில்
போக்குவரத்து வசதியை ஏற்படுத்த
கோரிய மநீம தலைவர் கமல்ஹாசன்,
“இறுதியாண்டு மாணவர்களுக்கு
கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் ரயில்களில்
மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை
மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல
நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என்று டிவீட் செய்துள்ளார்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவக்காற்றால் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு
வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்
தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர்
பகுதியில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் என்றும், வடகிழக்கு
பருவமழை இயல்பை விட 9% அதிகம்
பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயல்பை விட
47% அதிகமாக 102.9 செமீ மழை
பதிவாகியுள்ளது.
இதய நோயிலிருந்து காக்க….
மாமிச உணவுகளை குறைத்து தாவர
உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு
இருதய நோய்கள் ஏற்படுவதற்கான
அபாயம் குறைவாக உள்ளதாக
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடலில் ஜீரண சக்திக்கு உதவும் பாக்டீரியாக்களின் செயல் திறனை தாவர உணவுகள்மேம்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்வது குறையும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.