டி20 தரவரிசை – ராகுல், விராட்கோலி முன்னேற்றம்

டி20 தரவரிசை – ராகுல்,
விராட்கோலி முன்னேற்றம்

சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை
பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் டேவிட் மலன் (915)
முதலிடத்திலும், பாபர் அசாம் (871)
2-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய
வீரர்கள் கே.எல். ராகுல் (816) முன்னேறி
3-வது இடத்தையும், விராட்கோலி (697)
1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும்
பிடித்துள்ளனர். ஆரோன் பின்ச் 1 இடம்
பின்தங்கி 4-வது இடம் பிடித்தார். மேலும்,
வான்டர் டசன் 5-வது, காலின் முன்ரோ
6-வது இடத்தில் உள்ளனர்.

நாளைக்குள் விண்ணப்பிக்க…

கேட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி
பெறும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,
அவர்கள் படிப்பை முடிக்கும் வரை
உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கேட் உதவித்தொகையுடன்
எம்இ, எம்டெக் படிக்க விரும்பும்
மாணவர்கள், டிச.,10 வரை மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என
அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது.
டிச.,11-ந் தேதி இணைய வழியில்
எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை நடைபெறும்.

Breaking: விவசாய சட்டங்களை
ரத்து செய்ய முடியாது – பரபரப்பு

3 வேளாண் சட்டங்களை திரும்ப
பெற முடியாது என மத்திய
அரசு தெரிவித்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. ஆனால், சில
திருத்தங்களுக்கு தயார் என்றும்
குறிப்பிட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச
ஆதார விலை தொடரும் என
எழுத்துப்பூர்வமாக அளிக்க அரசு
முன்வந்துள்ளதாக போராட்டம் நடத்தும்
விவசாய சங்க பிரதிநிதி ராகேஷ் திகைத்
தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு
விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தும்
உத்தியா (அ) நிரந்தர தீர்வா உங்கள்
கருத்து?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami