விக்ரம் பட வில்லன்
இவர்தானாம்
மாஸ்டர் ரிலீஸுக்கு பிறகு கமல்ஹாசனின்
விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ்
கனகராஜ். படத்தின் டைட்டிலை
வீடியோவாக வெளியிட்டு வித்தியாசமான
முயற்சி மூலம் கவனம் ஈர்த்த
இப்படத்தில், கமலுக்கு வில்லனாக பிரபல
மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கெனவே வேலைக்காரன்
படத்தில் வில்லனாக நடித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் போஸ்டர்
ஒட்டக்கூடாது
கொரோனாவால்
தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டில் உரிய
அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது
என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ் ஒட்டுவதால் தனிமனித உரிமை
பாதிக்கப்படுவதாக அளிக்கப்பட்ட
மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவைப்படும் இடங்களில் மட்டும்
அனுமதியுடன் போஸ்டர் ஒட்ட உத்தரவிட்டுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவக்காற்றால் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு
வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்
தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர்
பகுதியில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் என்றும், வடகிழக்கு
பருவமழை இயல்பை விட 9% அதிகம்
பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயல்பை விட
47% அதிகமாக 102.9 செமீ மழை
பதிவாகியுள்ளது.