திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு முயற்சி பிறகு நடந்தது என்ன?

திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு முயற்சி பிறகு நடந்தது என்ன?

மணப்பாறை தனியார் மருத்துவமனையில் திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்வதாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை நள்ளிரவில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் இவரது 35 வயது மகள். திருமணமாகாத இவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணுச்சாமி(எ)சூசை என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மணப்பாறை மதுரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்வதாகவும் கூறி அவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருக்கும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், கர்ப்பிணி பெண்ணியிடம் நடந்தது குறித்தும் அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, கர்ப்பிணியின் தந்தை ஆரோக்கியம் அளித்த புகார் அடிப்படையில் அந்த பெண்னின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami