சொன்னதை செய்தார் அர்னாப் அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ் கூட்டணி!!
சொன்னதை செய்தார் அர்னாப் அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ் கூட்டணி!!
Republic ஆங்கில தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோசுவாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார், முடிக்கப்பட்ட கொலை வழக்கை காரணம் காட்டி அர்னாப் கோசுவாமியை மஹாராஷ்டிரா போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
அதன் பிறகு மும்பை உயர்நீதிமன்றம் அர்னாபிற்கு ஜாமீன் மறுக்க அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார், அர்னாப் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை கடுமையாக சாடியதுடன் அர்னாபிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது, இதையடுத்து அர்னாப் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பிறகு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றவர் அன்றைய இரவே தனது அலுவலகத்திற்கு திரும்பினார், தான் சிறை சென்று திரும்பியது எங்களுக்கு மிக பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றும் விரைவில் அனைத்து மொழிகளிலும் republic டிவி அலைவரிசை தொடங்கப்படும் என அப்போது வாக்குறுதி அளித்தார், இதன் தொடர்ச்சியாக அர்னாப் குழு இன்றைய தினம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது வங்க மொழியில் republic நெட்ஒர்க் 24 மணிநேரம் ஊடகத்தை தொடங்க இருப்பதாகவும், அதற்காக தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அர்னாப் தேசிய சிந்தனை கொண்ட பத்திரிகையாளர் என்பதும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் மும்பையில் அர்னாப் மீது மிகவும் கங்கணம் கட்டிக்கொண்டு அவரை வீழ்த்த முயற்சி செய்துவரும் நிலையில்..,
அர்னாப் அனைத்து மொழிகளிலும் செய்தி நிறுவனத்தை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்த கருத்து அதிர்ச்சியை அளித்தது. அதோடு விரைவில் மேற்குவங்கம், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநில மொழிகளில் தனது நிறுவனம் பிப்ரவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்த சூழலில் தற்போது மேற்கு வங்கத்தில் பணியை தொடங்கி இருப்பது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
அர்னாப் வங்க மொழியில் தனது ஊடகத்தை தொடங்க இருப்பதாக வெளியான அறிவிப்பே தமிழகத்தில் எதிரொலிக்கிறது என்றால், விரைவில் தமிழில் republic நெட்ஒர்க் வரும்போது அது எது போன்ற மாற்றத்தை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.