தங்கம், வெள்ளி விலை உயர்வு!
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னையில் இன்று காலை நேர
நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200
உயர்ந்து ரூ.37,256க்கும், கிராமுக்கு
ரூ.25 அதிகரித்து ரூ.4,657க்கும், 24
கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
40,296க்கும், கிராமுக்கு ரூ.5,037க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம்
வெள்ளி விலை 60 காசுகள் அதிகரித்து
ரூ.67.40க்கும், கிலோ ரூ.67,400க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
Breaking: தனியார் பள்ளிகள்
மட்டும் – மாணவர்களுக்கு
அதிர்ச்சி செய்தி
தனியார் பள்ளிகள் விரும்பினால்
அரையாண்டு தேர்வை ஆன்லைனில்
நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை
என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில்
அரையாண்டு தேர்வை தமிழக
அரசு ஒத்திவைத்துள்ளது.
50% பாட
குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும்
பாடங்களில் இருந்து மட்டும் தான்
தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
மேலும், அரசு சரியாக செயல்படுவதால்
பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை
அறிக்கை வெளியிட தேவையில்லை
என்றார்.
தமிழகத்தில் இன்றும், நாளையும்
- மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வாக்காளர்
பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள
இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு
முகாம் நடக்கிறது. வாக்காளர் சிறப்பு
முகாமில் வாக்காளர்கள் தங்கள் பெயர்,
முகவரி உள்ளிட்டவற்றில் திருத்தம்
மேற்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும்
உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில்
பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன்
மனு அளிக்கலாம். மேலும், வாக்காளர்
பட்டியலில் திருத்தம் செய்து ஜன.,
20-ல் இறுதி வாக்காளர் பட்டியல்
வெளியிடப்படும்.