மன அழுத்தத்தில் இந்தியர்கள் – ஆய்வில் பெரும் அதிர்ச்சி!
மன அழுத்தத்தில் இந்தியர்கள் –
ஆய்வில் பெரும் அதிர்ச்சி!
74% இந்தியர்கள் மன அழுத்தத்தில்
இருப்பதாக இந்தியாவில் நடத்தப்பட்ட
ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா
சூழ்நிலையில் மக்கள் மனநிலையில்
ஏதேனும் மாற்றம் உண்டா என்று
செய்யப்பட்ட ஆய்வில் 57% பேர் லேசான,
11% பேர் மிதமான மற்றும் 4% பேர் கடும்
மன அழுத்தத்தில் வாழ்வதாகவும், 88%
பேர் கவலை & பதற்றத்தில் உள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மக்களே
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.
இன்று இதுதான்BREAKING
நியூஸ் – அய்யய்யோ முடியலடா
சாமி
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு,
அவரது ரசிகர்கள் போயஸ்கார்டன்
இல்லத்தை சுற்றி பல்வேறு
வாசகங்களுடன் போஸ்டர்களை
ஒட்டியுள்ளனர். அதில், ஒரு போஸ்டரில்,
“மாற்றத்திற்கான பேரலை வெல்லும்!,
அதை விரைவில் நேரலை சொல்லும்!,
தமிழக முதல்வராக பதவியேற்க போயஸ்
தோட்டத்தில் இருந்து ரஜினிகாந்த்
புறப்பட்டார். வழி நெடுகிலும்
காவலர்களும், பொதுமக்களும்
உற்சாகமாய் வரவேற்றனர்” என்று
ஊடகங்கள் BREAKING நியூஸ் கொடுப்பது
போன்று வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஆன்லைனில் மாற்றும் வசதி
கொரோனா காலத்தில் பாலிசிதாரர்களுக்கு
உதவும் வகையில், யூலிப் பாலிசிகளின்
ஃபண்ட் வகைகளை ஆன்லைனில் மாற்றம் செய்யும் வசதியை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, நியூ
எண்டோமெண்ட் ப்ளஸ் (திட்டம் 935),
நிவேஷ் ப்ளஸ் (திட்டம் 849), எஸ்ஐஐபி
(திட்டம் 852) ஆகிய 3 பாலிசிகளுக்கு
இந்த வசதி கிடைக்கும். இதற்கு கட்டணம்
எதுவும் செலுத்த தேவையில்லை என்றும்
தெரிவித்துள்ளது.