இதுவரை இல்லாத நிலையில் மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பு, மம்தா பானர்ஜிக்கு கடும் சிக்கல்!!!
இதுவரை இல்லாத நிலையில் மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பு, மம்தா பானர்ஜிக்கு கடும் சிக்கல்!!!
பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் அவர் உடன் சென்ற பாஜக தலைவர்கள், இரு சக்கர வாகனத்தில் சென்ற பாஜக தொண்டர்கள் திரிணமூல் கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் மேற்கு வங்கத்தில் காவல்துறையின் கீழ் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்க படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொகுதியான டைமன்ட் ஹார்பர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கட்சியின் மாநில பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மாநில தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோரின் வாகனங்கள் சேதமடைந்தன.

முதலமைச்சர், காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தை எச்சரித்த போதும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நிலைமை ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.” என்று மேற்கு வங்க ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமித்ஷாவிடம் பேசிய கட்சியின் முக்கிய தலைவரான முகுல் ராய், அரசியலமைப்பின் 356 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரிடம் டிச., 19 மற்றும் 20 தேதிகளில் தான் மேற்கு வங்கத்தில் இருப்பேன் என தெரிவித்த அமிட்ஷா அதை உறுதியும் செய்துள்ளார்.
மேலும் எந்த பகுதியில் நட்டா மீது தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த பகுதிக்கு அமிட்ஷா செல்ல இருப்பதாகவும் அதே பகுதியில் ரோட் ஷோ நடத்த இருப்பதாகவும் மேற்குவங்க பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மேற்கு வங்கத்தில் இதற்கு முன்னர் 2019 நாடாளுமன்ற பொது தேர்தலின் போது அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமிட்ஷா பிரச்சாரம் செய்வதை மம்தா பானர்ஜி தடை செய்தார்.
அமிட்ஷா, யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் ஹெலிகாப்டர் மேற்கு வங்கத்தில் தரை இறங்க அவர் அனுமதி கொடுக்கவில்லை, தடையை மீறி அமிட்ஷா மேற்கு வங்கம் காரில் சென்றார் அப்போதும் நட்டா மீது நடந்த தாக்குதல் சம்பவம் போன்று அமிட்ஷா மீதும் தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அதன் தாக்கம் தேர்தலில் மிக பெரிய அடியை திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றது, 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 12 இடங்களை இழந்தது, 2014-ல் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக கூடுதலாக 16 இடங்களை பெற்று 18 இடங்களை கைப்பற்றியது.
இதே நிலைமைதான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என மேற்கு வங்க அரசியல் நிலவரத்தை கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள், மம்தா பானர்ஜியை பொருத்துவரை அவர் இப்போது செல்வாக்கை இழந்து விட்டார், அவரது கட்சியினர் அவரிடம் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இப்போது மம்தா கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் மத்திய அரசு மேற்கு வங்கத்தில் தனது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அப்படி ஆட்சி கவிழ்ந்தால் அதை வைத்து அனுதாப வாக்குகள் பெறலாம் என கணக்கிட்டு செயல்படுகிறார், ஆனால் பாஜக இதற்கு நேர் மாறாக மம்தா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பயத்தை உண்டாக்கும் சூழலை உருவாக்கி வருகிறது.
எனவே இது நிச்சயம் மம்தாவிற்கு எதிராக முடியும் என்கின்றனர், வருகிற 19-ம் தேதி உள்துறை அமைச்சர் அமிட்ஷா மேற்குவங்கம் செல்ல இருக்கும் சூழலில் அங்கு என்ன நடைபெற போகிறது என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.