இறந்த பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை உடல் 1 மாதத்துக்கு பின் அடக்கம் – கண்ணீர்
இறந்த பிக்பாஸ் பிரபலத்தின்
தந்தை உடல் 1 மாதத்துக்கு பின்
அடக்கம் – கண்ணீர்
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின்
தந்தை மரியநேசன் கடந்த மாதம்
கனடாவில் காலமானார். இந்நிலையில்,
பல சிக்கல்களுக்கு பிறகு 1 மாதத்துக்கு
பின் மரியநேசனின் உடல் இலங்கைக்கு
கொண்டு வரப்பட்டு, உடல் இறுதி
தகனம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது
அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது. இது லாஸ்லியா
மற்றும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குள்ளான தனுஷின்
கர்ணன் படம்
கர்ணன் திரைப்படத் தலைப்பை
மீண்டும் உபயோகப்படுத்த கூடாது என
தனுஷூக்கு சிவாஜி சமூகநலப்பேர்வை
கடிதம் எழுதியுள்ளது.
தனுஷ் நடிப்பது
ஒரு சமூகத்தை சார்ந்த திரைப்படம்
என்றும், அதற்கு கர்ணன் என
பெயரிடுவது மகாபாரதத்தை நேசிக்கும்
கோடிக்கணக்கானோரின் மனதை
புண்படுத்தக்கூடியதாக அமையும்
என்பதால் பெயர் மாற்றம் வேண்டும்
என்று விளக்கம் அளித்துள்ளனர்.
யாருக்காக பாராளுமன்றம்?மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி?
“சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில்
ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து
போனார்கள்.
மக்களைக் காக்கத்தான்
இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து
பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,
ஆயிரம் கோடியில் பாராளுமன்றம்
கட்டுவது யாரைக்காக்க? பதில்
சொல்லுங்கள் என் மாண்புமிகு
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று மநீம
தலைவர் கமல்ஹாசன் வினவியுள்ளார்.