நான் ஓசி சோறுதான் ஆனால்…! நீண்ட நாட்களுக்கு பிறகு தயாநிதி அழகிரி சூட்டிய பட்ட பெயருக்கு விளக்கம் அளித்த வீரமணி!!
நான் ஓசி சோறுதான் ஆனால்…! நீண்ட நாட்களுக்கு பிறகு தயாநிதி அழகிரி சூட்டிய பட்ட பெயருக்கு விளக்கம் அளித்த வீரமணி!!
திராவிட கழக தலைவர் வீரமணி தன்னை ஓசி சோறு என கிண்டல் செய்பவர்களுக்கு பதில் அளித்துள்ளார், அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை உண்டாக்கி வருகிறது.
கருணாநிதி மறைவிற்கு பிறகு முக.அழகிரி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு திமுகவில் இருப்பவர்கள் பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது என பதில் அளித்தார் வீரமணி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அழகிரியின் மகன் தயாநிதி ட்விட்டரில் காலம் காலமாக திமுக அதிமுக என மாறி மாறி ஓசி சோறு சாப்பிடும் வீரமணி இதை பேசலாமா என பதிலடி கொடுத்தார்.

அன்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் ஓசி சோறு வீரமணி என கிண்டல்கள் வெளிவந்தவண்ணன் இருந்தன, இந்த சூழலில் இரண்டு தினங்களுக்கு முன்னர் திராவிட கழக செயற்குழு கூட்டத்தில் ஓசி சோறு என கிண்டல் செய்பவர்களுக்கு வீரமணி பதில் ஒன்றை அளித்துள்ளார், அதில்
ஆம் நான் ஓசி சோறுதான், அது பாசச் சோறு! ‘ஓசி சோறு’ என்று என்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பொதுநலத் தொண்டன். எங்கள் இயக்கக் குடும்பம் தமிழ்நாடெங்கும் பரவி இருக்கிறது. கழகத் தோழர்களின் இல்லங்களில் நாங்கள் சாப்பிடுவது எங்களுக்கான மகிழ்ச்சியே – கழகக் குடும்பத்தார்களுக்கும் மகிழ்ச்சியே!
நேரடியாக இயக்கத்தில் இல்லாவிட்டாலும், தந்தை பெரியார் கொள்கைகளை சுவாசிக்கக் கூடியவர்கள் கட்சி களைக் கடந்தும் இலட்சக்கணக்கில் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில்கூட இன உணர்வு கொள்கைக் காரணமாக தந்தை பெரியாரை மதிப்பவர்கள், போற்றுபவர்கள், சமூகநீதியாளர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உண்டு.
காலையில், சிற்றுண்டி ஒரு கழகத் தோழரின் வீட்டில்; மதிய உணவு மற்றொரு கழகத் தோழரின் வீட்டில். இரவு உணவு இன்னொரு கழகத் தோழரின் வீட்டில் இருக்கும். ஆம், ஓசி சோறுதான் – அது பாச சோறே! . ‘யாசகம் புருஷ லட்சணம்’ என்னும் கும்பல் ஓசி சோறுபற்றியெல்லாம் பேசக்கூடாது.
அன்னை மணியம்மையார் நினைவு நாளான மார்ச் 16 ஆம் தேதி என்னுடைய சுற்றுப்பயணத்தைத் தொடங்க விருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார், வீரமணி தன்னை ஓசி சோறு என விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் அளித்த சூழலில் இப்போது மீண்டும் ஒரு ட்ரெண்டிங் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது, அதில் பலர் ஓசி சோறுதான் என ஒத்துகொண்டீர்கள் நன்றி ஆமாம் சுடு சோறா இல்லை பழைய சோறா என விளக்கம் கொடுங்கள் என மீண்டும் ஒரு கிண்டலுக்கு தயாராகி வருகின்றனர். ஆம் நான் ஓசி சோறுதான் ஆனால் ஒரு கண்டிஷன் அதில் பாசம் இருந்து பாச சோறாக கொடுக்க வேண்டும் என கண்டிஷன் வைத்து பதில் அளித்துள்ளார்.