முதல்வரை தேவையின்றி ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது!

முதல்வரை தேவையின்றி
ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு
எதிரான 3 அவதூறு வழக்குகளை
ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.

மேலும், முதல்வர்
பழனிசாமியை மு.க.ஸ்டாலின்
தேவையின்றி கடுமையாக விமர்சிக்கக்
கூடாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க
கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

தங்கம், வெள்ளி விலை குறைவு

சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.
37,016-க்கும், கிராமுக்கு ரூ.30
குறைந்து ரூ.4,627-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,056-க்கும், கிராம் ரூ.
5,007-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி
விலை கிராமுக்கு 0.30 காசு குறைந்து
கிராம் ரூ.67.10-க்கும், கிலோ வெள்ளி ரூ.
67,100-க்கும் விற்கப்படுகிறது.

FlashNews: முக்கிய திரை
பிரபலம் சென்னையில்
காலமானார்

3 முறை தேசிய விருது பெற்ற பிரபல
கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி
சென்னையில் காலமானார். இவர் இம்சை
அரசன் 23-ம் புலிகேசி, பாண்டவர் பூமி,
சங்கமம், அழகி, நான் கடவுள் உள்பட
பல படங்களில் கலை இயக்குநராக
பணியாற்றியுள்ளார்.

மேலும், தமிழக
அரசின் சினிமா விருது, கேரள அரசின்
சினிமா விருது என பல விருதுகளை
பெற்றுள்ளார். இவரது இறுதிச்சடங்குகள்
மதியம் 12 மணிக்கு மடிப்பாக்கத்தில்
உள்ள இல்லத்தில் நடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami