மாலை நேர தங்கம் விலை -உயர்வு
மாலை நேர தங்கம் விலை -உயர்வு
சவரனுக்கு ரூ.336 உயர்வு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி
22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.
37.224க்கும், கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.
4,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை
கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.67.90க்கும்,
ஒரு கிலோ வெள்ளி ரூ.67900க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
இதயத்திற்கு எந்த டீ பெஸ்ட்?
பால் கலக்காத பிளாக் டீயை விட,
பால் கலந்த டீ தான் நாம் அதிகம்
அருந்துவது. பிளாக் டீ மற்றும் க்ரீன் டீ
வகைகளில் உள்ள ஃப்ளேவனாய்டு,
ஆன்டிஆக்சிடன்ட் உட்பொருட்கள்
செல்களில் உள்ள ஃப்ரீரேடிகல்ஸ்
நுண்மங்களை நீக்குவதால் புற்றுநோய்,
கொலஸ்டிரால், இதய நோய்கள் வரும்
ஆபத்தை குறைக்கின்றன.
ஆனால்,
பால் கலந்த டீயில் புரதமும் கொழுப்பும்
அதிகரிப்பதால் தேயிலையின் மருத்துவ
குணங்கள் குறைய வாய்ப்புள்ளது.
அதேநேரம், பால் டீயில் உள்ள புரதம்
மற்றும் கால்சியம் உடலுக்கு ஊட்டம்
அளிக்கிறது. மொத்தத்தில் அளவாக
அருந்தினால் இரண்டுமெ பெஸ்ட் தான்.
International Tea Day ஐந்து
வகை தேநீர்!
உலகின் பல்வேறு பகுதிகளில் தேயிலை
பயிர் செய்யப்பட்டாலும், சீனா, இந்தியா,
இலங்கை, ஜப்பான், தைவான் ஆகிய
நாடுகளில் தான் அதிகம் விளைகிறது.
தேயிலையின் பிறப்பிடம் சீனா.
ஒயிட், கிரீன், ஓலாங், பிளாக் மற்றும்
பு’வெர் என்று ஐந்து தேனீர் வகைகள்
உள்ளன.
ஒரே மாதிரியாக தேயிலை
விளைவிக்கப்பட்டாலும், அதனை
பதப்படுத்துவதைப் பொறுத்து மேற்கூறிய
வகைகளில் பிரிக்கப்படுகின்றன. இந்த
ஐந்து பிரிவுகளில் பல வகையான
ப்ளேவர்களில் தேனீர் தயாரிக்கப்படுகிறது.