ஆஸி.,வுக்கு புறப்பட்டு சென்ற ரோகித் சர்மா!

ஆஸி.,வுக்கு புறப்பட்டு சென்ற
ரோகித் சர்மா!

ஐபிஎல் தொடரின் போது காயம்
ஏற்பட்டதால், ஆஸி., அணிக்கு எதிரான
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்
ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், தனது உடற்தகுதியை
நிரூபித்ததன் மூலம், 3வது மற்றும் 4வது
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக
ரோகித் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு
சென்றார்.

அம்பேத்கர் சிலை உடைப்புபரபரப்பு!

செங்கல்பட்டு செய்யூரில் நள்ளிரவில்
மர்ம நபர்கள் அம்பேத்கரின் சிலையை
உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை
கிளப்பியுள்ளது. சிலை உடைப்பை
கண்டித்தும், சாதி வெறிக் கும்பலை கைது
செய்ய வலியுறுத்தியும் விசிக கட்சியினர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய (ஜ)சனநாயகத்தை கட்டமைத்த
புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை, தந்தை
பெரியாரின் சிலை உடைக்கப்படுவது
சமீபகலமாக அதிகரித்துள்ளது.

180 கிமீ தூர ஓட்டப் பந்தயம்

1971 டிசம்பர் 3 முதல் 16 தேதிவரை
நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான்
போரில் இந்தியா வெற்றி பெற்றதை
நினைவுகூறும் வகையில், எல்லை
பாதுகாப்பு படை வீரர்கள் ஓட்டப்பந்தயம்
நடத்தினர்.

இதில், போரில் பங்கேற்ற
வீரர்களை கவுரவிக்கும் வகையில்
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 180
கிலோமீட்டர் ஓடினர். போட்டியில்
ராஜஸ்தானை சேர்ந்த அனுப்கர்
வெற்றியடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami