பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
நிறைவு
வாரத்தின் 2வது நாளான இன்று
பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை
நிறைவு செய்துள்ளது.

சென்செக்ஸ்
9.71 (+0.02%) புள்ளிகள் உயர்ந்து
46,263.17 புள்ளிகளாகவும், தேசிய
பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.70
(+0.07%) புள்ளிகள் உயர்ந்து 13,567.85
புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவு
பெற்றது.
குடியரசு தின விழாவில் சிறப்பு
விருந்தினர் போரிஸ் ஜான்சன்
இந்திய குடியரசு தின விழாவில்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
சிறப்பு விருந்தினராக பங்கேற்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின்
அழைப்பை ஏற்று ஜனவரில் போரிஸ்
ஜான்சன் இந்தியா வருகிறார்.
இதன்
மூலம் பிரிட்டனுடனான உறவை அடுத்த
கட்டத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
தகவல் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன்
நான் என்பது நினைவிருக்கட்டும்
“புரட்சித் தலைவர் திமுகவில்
இருந்தபோது திமுக திலகம் அல்ல;
தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக
திலகமும் அல்ல; என்றென்றும் அவர்
மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக்
கூட பார்த்திராதவர்களே, நான் அவர்
மடியில் வளர்ந்தவன் நினைவிருக்கட்டும்.
எதுவும் தடையல்ல” என்று மநீம
தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.