தங்கம், வெள்ளி விலை உயர்வு
தங்கம், வெள்ளி விலை உயர்வு
சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.
37,360-க்கும், கிராமுக்கு ரூ.17
அதிகரித்து ரூ.4,670-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,440-க்கும், கிராம் ரூ.
5,055-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம்
ரூ.68.90-க்கும், கிலோ வெள்ளி ரூ.
68,900-க்கும் விற்கப்படுகிறது.
Breaking: தமிழகத்தில் டிச.,19
முதல் ஊரடங்கில் அடுத்த தளர்வு
முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் டிச.,19 முதல் திறந்த
வெளியில் விளையாட்டு, கல்வி,
கலாசாரம், பொழுதுபோக்கு, அரசியல்,
மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த
அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார்.
சமூக இடைவெளியை
பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன்
அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களை
நடத்தலாம். இதற்கு மாவட்டங்களில்
ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர
காவல் ஆணையரிடமும் அனுமதி பெற
வேண்டும் என்றார்.
மருத்துவமனையில் வைரமுத்து
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ
மருத்துவமனையில் வைரமுத்து
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய
நோய் பிரச்சனைக்காக வைரமுத்து
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இவர் உடல்நிலை
குறித்து மருத்துவமனை தெரிவிக்காத
நிலையில், உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை
கவலையில் ஆழ்த்தியுள்ளது.