கேன் வில்லியம்சன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
கேன் வில்லியம்சன் தம்பதிக்கு
பெண் குழந்தை பிறந்தது
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்
கேப்டன் கூல் கேன் வில்லியம்சன்
தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வில்லியம்சன், “ஒரு அழகான பெண் குழந்தையை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவை
ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து
வாழ்த்து தெரித்துள்ளது.
11 பேர் உடல் கருகி பலி
ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில்
பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர்
உடல் கருகி உயிரிழந்தனர். மரத்தினால்
ஆன கட்டிடத்தில் இயங்கு வந்த இதில்
முதியவர்கள் 15 பேர் தங்கியிருந்தனர்.
திடீரென தீ பிடித்து வேகமாக பரவியதால்,
வெளியே வர முடியாமல் தவித்தனர்.
விபத்திலிருந்து தப்பிய 4 பேர் அளித்த
தகவலின் பேரி தீயணைப்பு வீரர்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது
குறித்த விசாரணை நடந்து வருகிறது.
JustIn: தமிழகத்தில் பள்ளிகள்
திறப்பு – பள்ளிக்கல்வித்துறை
அதிரடி
தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு
பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என
பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு
கொரோனா பரவக்கூடும் என்பதால்
ஆன்லைன் கல்வியை தொடர முடிவு
செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற
தேர்தலுக்கு பிறகு 10, 11, 12-ம்
வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
நடத்தவும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை
அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது
குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக
கூறப்படுகிறது.