கேரளா சவால் விட்டு ஒரு பக்க மீசையை இழந்த கம்யூனிஸ்ட் இளைஞர் தரமான சம்பவம் செய்த பாஜக!!!
கேரளா சவால் விட்டு ஒரு பக்க மீசையை இழந்த கம்யூனிஸ்ட் இளைஞர் தரமான சம்பவம் செய்த பாஜக!!!
கேரள மாநிலம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சில சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன, தமிழகத்தில் சிலர் தாமரை மலராது என சவால் விடுவதை போன்று கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் எங்களது திருவனந்தபுரம் 7 வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறமாட்டார் எனவும் அப்படி வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுத்து கொள்வேன் எனவும் சவால் விட்டார்.
ஆனால் அவரது சவால் நேற்று முன்தினம் தோற்று போனது பாதிக்கு அதிகமான வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார், இதையடுத்து சவால் விடுத்த நபரை பாஜகவினர் தொடர்புகொள்ள அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யபட்டு இருந்தது, இதையடுத்து உடனடியாக அந்த இளைஞரை தேடி பிடித்தனர், இதையடுத்து அவர் தான் சவால் விடுத்தது போன்று ஒரு பக்க மீசையை எடுத்து கொண்டார்.

இந்நிலையில் அவர் சவால் விடுத்த வீடியோவும் அவர் மீசையை எடுத்துக்கொண்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் ஏன் தோழர் மீசையை எடுத்து கொண்டு எங்களையும் அவமானத்திற்கு உட்படுத்துகிறீர்கள் வெற்றியை கூட கொண்டாட முடியாத நிலையை உண்டாக்கி விட்டீர்களே என புலம்பி வருகின்றனர்.
தொடர்ந்து பாஜக தென் மாநிலங்களில் கால் பதிக்க முடியாது என்ற வாதத்தை முறியடித்து வருகிறது, கடந்த உள்ளாட்சி தேர்தலை காட்டிலும் 28% அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது 2015 உள்ளாட்சி தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜக வாக்கு வங்கி 15 சதவிகிதத்தில் இருந்து 19% மாக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் விரைவில் இதே போன்ற நிலை உண்டாகும் எனவும் அதற்கு முன்னோட்டமாக கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தமிழக போராளிகள் பலரின் கனவில் மண்ணள்ளி போடும் எனவும் அக்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.