breaking மேற்குவங்கம் தற்போதைய நிலவரம் பாஜக -8 திரிணமூல் -1 கம்யூனிஸ்ட் -0 முழு நிலவரம் என்ன?

breaking மேற்குவங்கம் தற்போதைய நிலவரம் பாஜக -8 திரிணமூல் -1 கம்யூனிஸ்ட் -0 முழு நிலவரம் என்ன?

மேற்கு வங்க மாநிலத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற 6 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தப்பிக்குமா என்ற சந்தேகம் அம்மாநில மக்களுக்கு எழ தொடங்கி உள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டும் கடந்த இரண்டு நாட்களுக்குள் 9 MLA கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக மம்தா பானர்ஜிக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர், இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் உள்ளதாக கூறப்பட்ட சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார், அவர் உள்துறை அமைச்சர் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்க படுகிறது அவர் ஆதரவாளர்கள் 8 MLA கள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர், இந்நிலையில் தனது கட்சியை சேர்ந்த MLA-கள் பாஜகவில் இணைவதால் அதனை ஈடு செய்யும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து எம் எல் ஏக்களை மம்தா தனது கட்சியில் அவசரமாக இழுத்து கொண்டு இருக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 MLA கள் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஒருவர் மீண்டும் மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கேட்டு அக்கட்சிக்கு சென்றுவிட்டார், மேலும் ஒரு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார், இதனால் பாஜக -8 (திரிணாமுல் MLA ), திரிணமூல் – 1 ( கம்யூனிஸ்ட் MLA ), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் எந்த எம்எல் ஏ களும் இணையவில்லை.

வழக்கமாக சட்டமன்ற பொது தேர்தல், இடைத்தேர்தலுக்கு மட்டுமே வென்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும், ஆனால் மேற்குவங்கத்தில் பாஜக திரிணமூல் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருவதால் தினமும் கட்சிமாறும் எம்.எல்.ஏ கள் பட்டியல் வெளியாகி வருகிறது, பாஜக மேற்கு வங்க மாநில துணை தலைவர் ஜனவரி மாத இறுதிக்குள் 60-65 திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணைவார்கள் என்று கூறியிருப்பது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இன்று மற்றும் நாளை உள்துறை அமைச்சர் அமிட்ஷா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் எத்தனை பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்ற பயத்தில் அக்கட்சி தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இவை அனைத்திற்கும் கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்று பயணம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் நட்டா மீது அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதே காரணம் என கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி மாறி இப்போது தனது ஆட்சியை மம்தா காப்பாற்றி கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இரும்பு பெண் மணி என வர்ணிக்கப்பட்ட மம்தா பானர்ஜீ இப்போது தனது எம்எல் ஏ களை கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று இருப்பதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர்தான் எனவும் அவரால் தான் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருவதாகவும் அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்து கின்றனர்.

அத்துடன் பிரசாந்த் கிஷோர் உண்மையில் மம்தா பானர்ஜியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேலை செய்யவில்லை மாறாக இங்கு இருக்கும் மூத்த தலைவர்களை பாஜகவிற்கு மாற்றவே வேலை செய்கிறார் அவர் உண்மையில் ஒரு பாஜக ஏஜென்ட் எனவும் அக்கட்சியின் மூன்றாம் கட்ட தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சுமத்துகின்றனர்.

இதே பிரசாந்த் கிஷோரை தான் பல நூறு கோடி செலவில் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami