Christmas, New Year-க்கு தடை?

Christmas, New Year-க்கு தடை?

  • புதிய கட்டுப்பாடுகள் – முக்கிய
    தகவல்

இங்கி., ல் மாறுபட்ட குணங்களுடன்
புதிய கொரோனா வைரஸ் பரவி
வருவதால், மீண்டும் பொதுமுடக்கம்
அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்
இத்தாலியில் கிறிஸ்துமஸ்,
புத்தாண்டையொட்டி மீண்டும்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கர்நாடகாவில் கிறிஸ்துமஸ்,
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,
இந்தியாவில் சில மாநிலங்களில்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு
கொண்டாட்டங்களுக்கு தடையுடன்,
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நீச்சல் குளங்களில் அனுமதி

நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரர்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நீச்சல் குளங்களின் அளவுகளுக்கு ஏற்ப 10 முதல்
20 வீரர்கள் வரை அனுமதிக்க வேண்டும்.

நீச்சல் குளங்களில் எச்சில் துப்பக்கூடாது.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தால்
பயிற்சியில் ஈடுபடக்கூடாது. ஒருவரின்
உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

17 வயது மாணவி கர்ப்பம்

மதுரை தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்த
தங்கப்பாண்டிக்கு(27) திருமணம் ஆகி 8
ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத
நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த
+2 படிக்கும் 17 வயது மாணவியை
திருமனம் செய்து கொள்வதாக கூறி
கர்பமாக்கியுள்ளார்.

இதில் 8 மாத
கர்ப்பிணியான சிறுமி விஷயம் அவரது
பெற்றோருக்கு தெரிய வர அவர்கள்
அளித்த புகாரின் பேரில் போக்சோவில்
தங்கப்பாண்டியை போலீசார் கைது
செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami