நீச்சல் குளங்களில் அனுமதி
நீச்சல் குளங்களில் அனுமதி
நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரர்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நீச்சல் குளங்களின் அளவுகளுக்கு ஏற்ப 10 முதல்
20 வீரர்கள் வரை அனுமதிக்க வேண்டும்.

நீச்சல் குளங்களில் எச்சில் துப்பக்கூடாது.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தால்
பயிற்சியில் ஈடுபடக்கூடாது. ஒருவரின்
உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
17 வயது மாணவி கர்ப்பம்
மதுரை தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்த
தங்கப்பாண்டிக்கு(27) திருமணம் ஆகி 8
ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத
நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த
+2 படிக்கும் 17 வயது மாணவியை
திருமனம் செய்து கொள்வதாக கூறி
கர்பமாக்கியுள்ளார்.
இதில் 8 மாத
கர்ப்பிணியான சிறுமி விஷயம் அவரது
பெற்றோருக்கு தெரிய வர அவர்கள்
அளித்த புகாரின் பேரில் போக்சோவில்
தங்கப்பாண்டியை போலீசார் கைது
செய்துள்ளனர்.
இன்று முதல் என்ஜாய்
பண்ணுங்க மக்களே…
குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும்சுற்றுலா பயணியருக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 2
நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டு
இருந்த நிலையில், நீர்வரத்து
குறைந்துள்ளதால் குளிக்க அனுமதி
வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா
பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.