3 மாதங்களில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து – உஷாரா இருங்க…
3 மாதங்களில் உங்கள் ரேஷன்
கார்டு ரத்து – உஷாரா இருங்க…
ரேஷன் கடைகளில் தொடர்ந்து
3 மாதங்கள் பொருட்கள்
வாங்கவில்லையென்றால் உங்கள் ரேஷன்
கார்டு ரத்து செய்யப்படும் என சமூக
ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

இது முற்றிலும் வதந்தியானது. இதை
யாரும் நம்ப வேண்டாம் என பிஐபி தனது
டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதுபோல் செய்தி ஏதேனும் வந்தால்
எச்சரிக்கையாக இருக்கவும்.
Breaking: தமிழக ரேஷன்
அட்டை தாரர்களுக்கு ரூ.2,500புதிய அதிரடி அறிவிப்பு
ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பு,
விலையில்லா வேட்டி, சேலை
வழங்கும் திட்டத்தை தலைமை
செயலகத்தில் முதல்வர் பழனிசாமி
தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி,
தமிழகத்தில் 2.10 கோடி ரேஷன்
அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும்
பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜன.,4-ந் தேதி
ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ்,
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராக்கி பாய் இஸ் பேக் –
கேஜிஎஃப் 2 டீசர் தேதி
அறிவிப்பு
2018-ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில்
யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப்
திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்,
கேஜிஎஃப் 2 படத்தின் படப்பிடிப்பு
முழுவதும் முடிவடைந்த நிலையில்,
படத்தின் டீசர் ஜனவரி 8-ந் தேதி காலை
10.18 மணிக்கு வெளியாக உள்ளதாக
படக்குழு அறிவித்துள்ளது.