இன்னும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அதிரடி
இன்னும் 10 நாளில் கொரோனா
தடுப்பூசி – மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷ் வர்தன் அதிரடி அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.

30 கோடி மக்களுக்கு
முன்னுரிமை அடிப்படையில் கொரோனா
தடுப்பூசி போடப்படும் என்றும் ராணுவ
வீரர்கள், காவலர்கள், சுகாதாரப்
பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி
செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இன்று பெண்கள் தலையில்
மல்லிகை பூ வைக்க முடியாது!
ஏன் தெரியுமா?
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில்
மல்லிகை கிலோ ரூ.2000க்கு விற்பனை
செய்யப்படுவதால் வியாபாரிகள்
அதிர்ச்சியடைந்துள்ளனர். அரளி ரூ.
300, பிச்சிப்பூ ரூ.700, சம்பங்கி ரூ120,
செவ்வந்தி ரூ.200 என பூக்களின் விலை
கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
விலை
உயர்வால் பல வியாபாரிகள் பூக்களை
வாங்காமல் திரும்பி செல்கின்றனர்.
இதனால், பெண்கள் மல்லிகை பூவை
தலையில் வைக்க முடியாத சூழல்
ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் –
அதிரடி அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் சட்டமன்றத்தில்
வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு
ஊதியம் வழங்கப்படும் என்று மநீம
தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்களை வறுமை கோட்டிற்கு மேல்
அல்லாமல் செலுமை கோட்டிற்கு மேல்
வைக்க வேண்டும் என்பதே நோக்கம்.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம்
ஒழிய வேண்டும். இணைய பாதுகாப்பில்
மநீம உறுதியாக இருக்கிறது. வரும்
முன் கணிப்பு என்ற முறையில் அரசை
செயல்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.