படுக்கையறையில் வேண்டாமே….
படுக்கையறையில்
வேண்டாமே….
உறங்குவதற்கும் இளைப்பாறுவதற்கும்
தான் படுக்கையறை. ஆனால்,
பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள்
விளையாடுவது, சாப்பிடுவது,
பெரியவர்கள் வேலை செய்வது, என,
எல்லாமே படுக்கையறையில் தான்
நடக்கிறது. இதைத் தவிர்த்தாலே,
படுக்கைறை பரவசமூட்டும் இடமாகும்.

குழந்தைகளை படுக்கையறைக்குள் ஓடி
விளையாட அனுமதிக்க வேண்டாம். நூல்
மற்றும் ஃபர் பொம்மைகளையும் உள்ளே
அனுமதிக்கக் கூடாது. இதனால் தூசிகள்,
அழுக்குகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.
பற்களில் மஞ்சள் கறை நீங்க…
பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய்
எண்ணெய் -1 ஸ்பூன், ஆப்பிள் சீடர்
வினிகர் – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு
1 ஸ்பூன், டூத் பேஸ்ட் – 1 ஸ்பூன்
ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு
பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.
அலுமியத்தாள் ஒன்றை விரித்து அவற்றில்
பரப்பியவாறு வைக்கவும். அதை
பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால்
தேய்த்துவிட்டு வெந்நீரில் கொப்பளித்தால்
கறை குறைந்திருக்கும்.
வீடுகள் எப்பொழுதும் குளுமையாக வைத்துக்கொள்ள….
பெரும்பாலானவர்கள் வீடுகளில் ஒரு
அறையில் மட்டும் தான் ஏசி இருக்கும்,
ஆகையால் குடும்பத்தினர் அனைவரும்
ஒரே அறையில் தங்குவது நெருக்கடியை
ஏற்படுத்தும்.
இதை தவிர்த்து வீடு முழுதும்
குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது,
மாடித்தோட்டம் அமைப்பது, வீட்டிற்கு
இளநிற பெயிண்ட் அடிப்பது என வீடு
மொத்தம் குளுமையாக வைக்க உதவும்.
இதன் மூலம் கரண்ட் பில்லில் இருந்தும்
தப்பிக்கலாம்.