எம்.ஜி.ஆர் நினைவு தினம் – முதல்வர் ட்வீட்

எம்.ஜி.ஆர் நினைவு தினம் –
முதல்வர் ட்வீட்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின்
நினைவு தினத்தையொட்டி, முதல்வர்
பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,
”சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின்
தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள்
திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த
மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும்
புரட்சித்தலைவர்.

மக்களுக்கு ஈகை
செய்வதற்காக தன் வாழ்வினை
அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின்
நினைவுநாளில் அவரை நினைவு
கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நாளை முதல் வங்கிகள்
இயங்காது

நாளை முதல் டிச.27ம் தேதி
வரை வங்கிகள் இயங்காது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ்
பண்டிகை காரணமாக 25ம் தேதியும்,
4வது சனிக்கிழமை என்பதால் 26ம்
தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார
விடுமுறை என்பதால் வங்கிகள்
3 நாட்கள் செயல்படாது.

எனவே,
வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான
பிரச்னைகளை இன்றே தீர்த்துக்
கொள்ள வேண்டும். மேலும், 3 நாட்கள்
விடுமுறை என்பதால் ஏடிஎம்-களில்
பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், உங்களுக்கு தேவையான
பணத்தை இன்றே எடுத்துக் கொள்ளுங்கள்.

போனில் உள்ள அந்தரங்க
தகவல் திருடப்படும் – அலர்ட்

*உங்களின் அனைத்து தொலைபேசி
தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா,
இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி
நினைவகம் ஆகியவை இந்த பணக் கடன்
வழங்குநர்களால் எடுக்கப்படும் என்பதால்
எச்சரிக்கையாக இருக்கவும்.

*உங்களுக்கோ அல்லது உங்களை
சார்ந்தவர்களுக்கோ அச்சுறுத்தல் மற்றும்
துன்புறுத்தல் அழைப்புகள் வந்தால்
காவல்துறையில் புகார் கொடுங்கள். *இந்த
அப்ளிகேஷன்களில் (loan apps) உள்ள
தொடர்பு விபரங்கள், குறை தீர்க்கும்
அதிகாரியின் பெயர்கள் மோசடியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami