EXCLUSIVE- நினைவு தினத்தில் மீண்டும் பிறந்தார் MGR
EXCLUSIVE- நினைவு தினத்தில்
மீண்டும் பிறந்தார் MGR
எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு
‘தலைவி’ படக்குழு அச்சு அசலாக
எம்ஜிஆரின் தோற்றத்தை பிரதிபலிப்பது
போல் உள்ள அரவிந்த் சாமியின்
புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில்
டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதன்
மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்
எம்.ஜி.ஆரை திரையில் பார்க்க ரசிகர்கள்
ஆர்வமாக உள்ளனர்.
எம்.ஜி.ஆர் நினைவு தினம் –
முதல்வர் ட்வீட்
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின்
நினைவு தினத்தையொட்டி, முதல்வர்
பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,
”சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின்
தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள்
திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த
மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும்
புரட்சித்தலைவர்.
மக்களுக்கு ஈகை
செய்வதற்காக தன் வாழ்வினை
அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின்
நினைவுநாளில் அவரை நினைவு
கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாளை முதல் வங்கிகள்
இயங்காது
நாளை முதல் டிச.27ம் தேதி
வரை வங்கிகள் இயங்காது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ்
பண்டிகை காரணமாக 25ம் தேதியும்,
4வது சனிக்கிழமை என்பதால் 26ம்
தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார
விடுமுறை என்பதால் வங்கிகள்
3 நாட்கள் செயல்படாது.
எனவே,
வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான
பிரச்னைகளை இன்றே தீர்த்துக்
கொள்ள வேண்டும். மேலும், 3 நாட்கள்
விடுமுறை என்பதால் ஏடிஎம்-களில்
பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், உங்களுக்கு தேவையான
பணத்தை இன்றே எடுத்துக் கொள்ளுங்கள்.